UPSC Exam 2018

யூ.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் 2018 - ஐ.ஏ.எஸ, ஐ.பி.எஸ்.. உள்ளிட்ட ‘சிவில் சர்வீஸ்’ பணிகளுக்கு 782 இடங்கள்

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-8-2018 தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 2-8-1986 மற்றும் 1-8-1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். ஊனமுற்றோருக்கும் பிரிவுக்கு ஏற்ப வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில், ஏதேனும் ஒரு பிரிவில் குறைந்தபட்சம் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் :

பெண் விண்ணப்பதாரர்கள் மாற்றுத் திறனாளிகள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தவிர்த்த மற்றவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையிலும், குறிப்பிட்ட வங்கிகளில் நேரடியாகவும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். பார்ட் 1, பார்ட் 2 என இரு நிலைகளில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். முன்னதாக புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றுகளை குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும். தேவையான இடத்தில் அவற்றை பதிவேற்றம் (அப்லோடு) செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க 6-3-2018-ந் தேதி மாலை 6 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 3-6-2018 அன்று நடைபெறுகிறது. முதன்மைத் தேர்வு (மெயின் எக்ஸாம்) செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments

Powered by Blogger.