Indian Forest Service Exam 2018

இந்திய வனத் துறையில் 110 பணியிடங்கள்

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-8-2018 தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 32 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 2-8-1986 மற்றும் 1-8-1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். ஊனமுற்றோருக்கும் பிரிவுக்கு ஏற்ப வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

அனிமல் ஹஸ்பண்டரி, வெட்னரி சயின்ஸ், பாட்டனி, கெமிஸ்ட்ரி, ஜியாலஜி, மேத்தமேட்டிக்ஸ், பிசிக்ஸ், ஸ்டாட்டிஸ்டிக்ஸ், ஷூவாலஜி, அக்ரிகல்சர், பாரஸ்ட்ரி போன்ற பட்டப்படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கட்டணம் :

பெண் விண்ணப்பதாரர்கள் மாற்றுத் திறனாளிகள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் தவிர்த்த மற்றவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையிலும், குறிப்பிட்ட வங்கிகளில் நேரடியாகவும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 6-3-2018

விண்ணப்பிக்க தளம் : www.upsc.gov.in

No comments

Powered by Blogger.